திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2322 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2322மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – 41
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும் குடையாக ஆகாத்த கோ.
பதவுரை Show / Hide
குன்றம் குடை ஆக, Kuntram Kudai Aaga - கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆகாத்த கோ, Aagatha Ko - பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்,
மன்னு மணி முடி, Mannu Mani Mudi - பொருந்தின ரத்னங்களையுடைய கிரீடம்!
நீண்டு, Neendu - ஓங்கி வளர்ந்து
அண்டம் போய், Andam Poi - அண்ட பித்தையைச் சென்றுகிட்ட,
எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குக்களையும்
துன்னு பொழியில் அனைத்தும், Thunnu Pozhiyil Anaiththum - (பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும்
சூழ், Sool - வியாபித்த
கழலே, Kazhale - திருவடியினாலேயே
மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான், Minnai Udai Aaga Kondu Ulaku Alandhaan - மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான்.