திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2324 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2324மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் – அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் – அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் – இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் – 43
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து, புனமேய பூமி யதனை, – தனமாகப் பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார், ஓரகலத் துள்ள துலகு.
பதவுரை Show / Hide
சினம் மா மதம், Sinam Maa Matham - கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின், Kalittrin - (குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண்மருப்பை, Thinmaruppai - திடமான தந்தத்தை
சாய்த்து, Saaytthu - முறித்துத்தள்ளினவனும்
புனம் மேய, Punam Maeya - நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை, Boomi Adhanai - பூமியை
தனம் ஆக, Dhanam Aaga - நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும், Pera Akalaththul Odukkum - சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார், Pera Aaram Maarvanar - சிறந்த ஹாரஙகள் பூண்ட திருமார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து, Oru Akalathu - ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின்
உலகு உள்ளது, Ulaku Ulladhu - உலகமெல்லாம் உள்ளது.