Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2325 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2325மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் – நெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் – 44
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
உலகமும், Ulagamum - உலகங்களும்
ஊழியும், Oozhiyum - ஸம்ஹாரகாலமும்
ஆழியும், Aazhiym - கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும், On Kezh Avan Kathirum - அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களையுமுடைய சந்திர ஸூர்கயர்களும்
செம் தீயும், Sem Theeyum - சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான், Aavaan - ஆகிய இப்பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த, Pala Kathirgal Paariththa - பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான், Pai Pon Mudhiyaan - அழகிய பொன்முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே, Adi Inaikkai - உபயபாதங்களக்கே
பூரித்து புரி, Pooriththu Puri - பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.