| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2326 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று ஸ்ரீ பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் – அவன் நமக்கு ஸூலபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் – பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் – இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் – 45 | புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித், திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள் மண்கோட்டுக் கொண்டான் மலை. | மதம் வேழம், Madham Vezham - மத்த கஜமானது மா பிடியோடு, Maa Pidiyodu - சிறந்த தன்பேடையோடு புரிந்து, Purindhu - கலவிசெய்து ஊடி, Oodi - பிரணய கலஹம்பண்ணி திரிந்து, Thirinthu - (அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து சினத்தால் பொருது வெண்கோடு, Sinaththaal Porudhu Venkodu - கோபத்தினால் கரைபொருது வெளுத்த கொம்புகளினின்று விரிந்த சீர் முத்து, Virindha Seer Muthu - சிறந்த முத்துக்களை உதிர்க்கும், Uthirkkum - வெளிவிடப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருமலையே மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்) மண், Man - பூமியை கோடு, Kodu - கோரப்பல்லின்மீது கொண்டான், Kondaan - எடுத்துக்கொண்டுவந்த பெருமானுடைய மலை, Malai - திருமலையாம். |