திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2328 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2328மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் – தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் – 47
நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா, – அன்று துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள் நரகவாய் கீண்டாயும் நீ.
பதவுரை Show / Hide
நீர் ஏற்று நின்ற பெருமானே, Neer Aetru Nindra Perumane - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கிக்கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை, Ulaku Ellam Senra Perumai - எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா, Sem Kannaa - செந்தாமரைக்கண்ணனே!
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
துரகம், Duragam - குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசினென்னுமசுரனுடைய
வாய், Vaai - வாயை
கீண்ட, Keenda - கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய், Thuzhai Mudiyai - திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள், Nangal - எங்களுடைய
நரகம் வாய், Naragam Vaai - நரகமார்க்கத்தை
கீண்டாயும் நீ, Keendayum Nee - அழித்தவனும் நீயேயன்றோ?