திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2329 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2329மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – 48
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய், தேவா சுரம்பொருதாய் செற்று?
பதவுரை Show / Hide
நீர் ஏற்று, Neer Aetru - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கி
உலகம், Ulagam - உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே, Adi Alandhai Nee Andrae - திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று, Ninru - ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே, Meyththay Nee Andrae - மேய்த்தவனும் நீயன்றோ?
மா, Maa - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம், Vaai Uram - வாயின் வலிமையை
பிளந்து, Pilandu - ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய், Maa Maruthin Oodupoi - பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம், Devaasuram - தேவரஸுர யுத்தத்திலே
செற்று, Settru - (அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே, Porudhai Nee Andrae - போர் செய்தவனும் நீயன்றோ?