| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 233 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 11 | காரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம் பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல் ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11 | கார் ஆர்,Kaar Aar - மேகத்தோடு ஒத்த மேனி நிறத்து,Meni Nirathu - திருமேனி நிறத்தை யுடைய எம் பிரானை,Em Piraanai - கண்ண பிரானைக் குறித்து, கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி,Kadi Kamal Poo Kuzhal Aaychi - வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்,Aaraa In Amudhu Unna Tharuvan Naan - (எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான் அம்மம் தாரேன்,Ammam Thaarein - (இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) அம் மந்தர அஞ்சுவேன்” என்ற மாற்றம்,Endra Maattram - என்று சொன்ன பாசுரத்தை சொன்ன,Sonna - அருளிச் செய்த, பார் ஆர்,Paar Aar - பூமி யெங்கும் நிறைந்துள்ள தொல்,Thol - பழமையான புகழான்,Pugazhaan - கீர்த்தியை யுடையராய் புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மன்னன்,Mannan - நிர்வாஹகரான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வாருடைய பாடல்,Paadal - பாடலாகிய ஏர் ஆர் இன் இசை மாலை,Er Aar In Isai Maalai - இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள் இருடீகேசன்,Erudheekesan - ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவார்கள். |