திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2330 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2330மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் – இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் – 49
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் – முற்றல் முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய், மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து.
பதவுரை Show / Hide
பின்னைக்காய், Pinnaikkai - நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி, Muttral Muri - முதிர்ந்த வலிமையையுடைய
எற்றின், Etrin - ரிஷபங்களினுடைய
முன் நின்று, Mun Nindru - எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து, Sozhndhu - (அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய், Moymbu Ozhiththai - (அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி, Moori - பெரிதாய்
சுரி ஏறு, Suri Aeru - (உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய், Sanginai - சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும், Settrathuvum - கைகூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை, Sera Iraniyanai - உன்னைச் சேர்த்துவாழமாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று, Sendru - (மஹாபலிக்கலில்) சென்று
ஏற்று, Aetru - யாசித்து
பெற்றதும், Pettradhum - பெற்றுக் கொண்டதும்
மா நிலம், Maa Nilam - பெரிய பூமியை.