திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2331 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2331மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே – அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷ பாதத்தை யருளிச் செய்கிறார் – ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக் ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் – 50
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான், அணிநீல வண்ணத் தவன்.
பதவுரை Show / Hide
சூழ்ந்த, Sozhndha - நிறையச்சாத்தப்பெற்றுள்ள
துழாய் அலங்கல், Thuzhai Alangal - திருத்துழாய் மாலையாலே
சோதி, Sothi - புகர் பெற்ற
மணி முடி, Mani Mudi - மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன், Ani Neelam Vannaththavan - அழகிய நீலநிறத்தையுடையனாயுமிருக்கிற
மால், Maal - ஸர்வேச்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய், Thazhntha Aruvi Thadavarai Vaai - பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை, Aazhntha Mani Neer Sunai - ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த, Valarntha - (சாபத்தினால்) வளர்ந்துகொண்டிருந்த
மா முதலை, Maa Muthalai - பெரிய முதலையை
கொன்றான், Konraan - முடித்தொழித்தான்.