| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2333 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் – கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது – கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் – 52 | எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய் முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. | இராமன் ஆய், Iraaman Aay - ஸ்ரீராமனாகத் திருவவதரித்து மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஸப்தஸால உருஷங்களையும் எய்தான், Eyththaan - அம்பு செலுத்தித் துளைத்தான், ஏந்து இழைக்கு ஆய், Ainthu Izaikku Aay - தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக அ மான் மறிய, A Maan Mariya - அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை எய்தான், Eyththaan - பின்சென்றான், எய்த்துவும், Eyththuvum - அம்புகளைச் செலுத்தினதும் தென் இலங்கை கோன் வீழ, Then Ilangai Kon Veezha - தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம், முன், Mun - முன்பொரு காலத்திலே குறள் உரு ஆய், Kurall Uru Aay - வாமன ரூபியாய் சென்று, Sendru - மாவலியிடத்திற் சென்று முயன்று, Muyandru - (வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து நிலம் கைக் கொண்டான், Nilam Kaik Kondaaan - பூமியைக் கைப்பற்றினான். |