திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2334 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2334மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் – 53
முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, இயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர் மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய், தண்ணலங்கல் மாலையான் தாள்.
பதவுரை Show / Hide
மூரி வேலை, Moori Vela - பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே
ஆலமரத்து இலையின் மேலால், Alamarathu Ilaiyin Melal - ஆலமரத்தின் இலைமீது
பயின்று, Payinru - நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு, Angu - அங்கே
மண், Man - பூமியினுடைய
நலம், Nalam - நன்மையை
கொள், Kol - அபஹரித்த
வெள்ளத்து, Vellathu - பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய், Or Maayam Kuzhavi Aay - ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான், Than Alankal Maalaiyaan - குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான், Thaan - திருவடிகளை
நெஞ்சே, Nenchae - நெஞ்சமே!
முயன்று தொழு, Muyanru Thozhu - உத்ஸாஹங்கொண்டு வணங்கு.