திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2335 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2335மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – ஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 54
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு, பெண்ணகலம் காதல் பெரிது.
பதவுரை Show / Hide
சகடம், Sakadam - சகடாஸுரனை
தாளால், Thaalal - திருவடியாலே
உதைத்து, Udaithu - உதைத் தொழித்தவனாயும்
பகடு, Pagadu - (குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி, Undhi - உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடைபோய், Maruthu Idaipoy - மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
சீனா, Cheena - (அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்
கேழல் ஆய், Kezhal Aay - வராஹரூபியாய்க் கொண்டு
மீளாது, Meelaadhu - காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண்கீண்ட, Agalam Mankeenda - அகன்ற பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு, Or Maathu Ugandha Maarvarku - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பையுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம், Pen Agalam - பூமிப்பிராட்டியினுடைய திருமேனியில்
காதல், Kaadhal - ஆசையானது
பெரிது, Peridhu - கரை புரண்டிருப்பது.