திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2336 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2336மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் – இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் – 55
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால் பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன் நீணெடுங்கண் காட்டும் நிறம்.
பதவுரை Show / Hide
பெரியவரை மார்வில், Periyavarai Marvil - பெரிய மலைபோன்ற திருமார்பிலே
பேர் ஆரம்பூண்டு, Per Arambundhu - பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு
திரியுங்கால், Thiriyungkal - உலாவினால்
கரிய முகிலிடை மின் போல, Kariya Mukilidai Min Pola - காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று, Mattru - அன்றியும்,
அவன் தன், Avan Than - அப்பெருமானுடைய
நீள் நெடு கண், Neel Nedu Kan - நீண்டு பரந்த திருக்கண்களினுடைய
நிறம், Niram - நிறத்தை
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும், Paan Odunga Vandu Arayum Pangkayame Kaattum - பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக (அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.