Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2337 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2337மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை – என்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது – பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் – இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு.
இறை, Irai - ஸர்வேச்வரனுடைய
உருவம், Uruvam - திவ்யமங்கள விக்ரஹமானது
நிறம், Niram - நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து, Seithu - சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது, Pasithu - பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது, Karithu - கறுத்திருக்குமோ,
என்று, Endru - எவ்வண்ணமா யிருக்குமென்று
எண்ணில், Ennil - ஆராயுமிடத்தில்
யாம் அறியோம், Yaam Ariyom - நாம் அறியமாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய, Niraivu Udaiya - ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும், Na Mangai Thanum - ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன், Poo Mangai Kelvan - பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு, Polivu - பூர்த்தியை
நலம் புகழ வல்லனே, Nalam Pugazha Vallanai - நன்றாகப் புகழ சக்தி யுடையவனோ