| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2338 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் – ஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் – முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் – ஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது – ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் – 57 | பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி, மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, தெருடன்மேல் கண்டாய் தெளி. | திரு, Thiru - பிராட்டியானவள், பொலிந்து இருண்ட கார், Polinthu Irunda Kaar - செறிந்து இருளையுடைத்தான கார் காலத்திலுண்டான வானில், Vaanil - மேகத்தில் மின்னே போல் தோன்றி, Minne Pol Thondri - மின்னல் போல் பிரகாசித்து மலிந்து இருந்த மார்வன், Malinthu Irundha Marvan - பொருந்தி யிருக்கப்பெற்ற திருமார்பை யுடையனாய் பொலிந்த கருடன் மேல் கொண்ட, Polintha Karudan Mel Konda - விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான கரியான், Kariyan - கருநிறப் பெருமானுடைய கழலே, Kazhale - திருவடிகளே தெருள்தன் மேல், Therulthan Mel - ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று தெளி கண்டாய், Theli Kandaai - (நெஞ்சே!) தெளிந்திரு |