| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2339 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் – அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் – இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் – 58 | தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. | தெளிந்த, Thelindha - ஸ்வச்சமாயிருக்கிற சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி, Silaadhalaththin Mel Irundha Manthi - கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது. அளித்த கடுவனை நோக்கி, Alitha Kaduvana Nokki - ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம், Vilangiya Ven Mathiyam Thaan Endrum Vengadam - ‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘ என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம் மேல் ஒருநாள், Mel Orunaal - பண்டொரு காலத்தில் மண், Man - பூமியை மதியின், Mathiyin - தனது புத்தி சாதுரியத்தினால் கொண்டு, Kondhu - (மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு) உகந்தான், Uganthaan - திருவுள்ள முவந்த ஸர்வேச்வான் வாழ்வு, Vaazhvu - வாழுமிடம் |