திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 234 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
234பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 1
அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின் என் செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-1
பதவுரை Show / Hide
அஞ்சனம் வண்ணனை,Anjanam Vannanai - மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்,Aayar Kolam - இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை,Kozhuthinai - (அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை,Pillaiyai - (எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்,Manaigal Thorum - (தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே,Thiriyame - (இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
காய்ந்த,Kaayndha - சீறி யுதைத்த
கழல்,Kazhal - வீரக் கழலை அணிந்துள்ள
அடி,Adi - திருவடிகள்
நோவ,Nova - நோம் படியாக
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்,En Seiya Pokkinean - ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.