| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2340 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் – அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் – ஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி- திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் – 59 | வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய், தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும் திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள் பெருமான் அடிசேரப் பெற்று. | மை போல் நெடு வரை வாய், Mai Pol Nedu Varai Vaai - மைபோன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே தாழும், Thaalum - இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற அருவி போல், Aruvi Pol - அருவிபோலே தார் கிடப்ப, Thaar Kidappa - மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு) சூழும், Soolum - ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற திரு, Thiru - பிராட்டியை யுடையவனும் மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும் செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான எங்கள் பெருமான், Engal Perumaan - எம்பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை சேர பெற்று, Sera Petru - அஞகப் பெற்றதனால் வாழும் வகை அறிந்தேன், Vazhum Vagai Arindhen - உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன். |