திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2341 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2341மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது – விரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் – பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் – அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது – உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன- அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் – 60
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப் பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.
பதவுரை Show / Hide
பெற்றம், Petram - பசுக்களை
முற்ற காத்து, Mutra Kaathu - ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய், Pinai Marudham Oodu Poi - இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு, Pei Mulai Undu - பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து, Maa Sakadam Uthaithu - பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு, Kandru Gunilai Kondo - கன்றாகிய எறிதடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான், Vilanganikku Erindhaan - விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம், Vetri Panilam - ஜயசீலமான சங்கை
வாய் வைத்து, Vaai Vaiththu - வாயிலே வைத்து ஊதி
உகந்தான், Uganthaan - மகிழ்ந்தான்