| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2342 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ – ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது – இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் – பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் – பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் – 61 | பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம், கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை, இளங்குமரன் றன்விண் ணகர். | வைகுந்தம், Vaikundham - பரமபதத்தை கொண்டு, Kondhu - இருப்பிடமாகக் கொண்டு அங்கு, Angu - அவ்விடத்திலே உறைவாற்கு, Uraivaarku - வாஸம்பண்ணு மெம்பெருமானுக்கு பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலும் வேங்கடம், Vengadam - திருமலையும் வண்டு வளம் கிளரும் நீள் சோலை, Vandu Valam Kilarum Neel Solai - வண்டுகளின் திரள்மிக்கிருக்கிற பரந்தசோலைகளை யுடைத்தாய் வண், Van - அழகியதாய் பூ, Poo - போக்யமான கடிகை, Kadikai - திருக்கடிகைக் குன்றும் இள குமரன் தன் விண்ணகர், Ila Kumaran Than Vinnagar - நித்ய்யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும் (ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்) பண்டு எல்லாம், Pandhu Ellam - என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம் கோயில் போல், Koyil Pol - கோயில்களாக இருந்தன போலும். (இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை). |