| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2343 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் – கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ – ஸ்ரீ பரம பதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் – கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் – ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் – 62 | விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. | விண்ணகரம், Vinnakaram - திருவிண்ணகரமும் வெஃகா, Vegha - திருவெஃகாவும் விரி திரை நீர் வேங்கடம், Viri Thirai Neer Vengadam - விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும் மண் நகரம், Man Nagaram - பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற மா மாடம் வேளுக்கை, Maa Maadam Velukkai - பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும் மண் அகத்த தென் குடந்தை, Man Agatha Then Kudanthai - பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும் தேன் ஆர் திரு அரங்கம், Then Aar Thiru Arangam - தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும் தென் கோட்டி, Then Kotti - தென் திருக்கோட்டியூரும் (ஆகிய இத்திருப்பதிகள்) தன் குடங்கை, Than Kudangai - தனது உள்ளங்கையாலே நீர் எற்றான், Neer Etran - (மாவலிபக்கல்) உதகதானம் பெற்ற பெருமான் தாழ்வு, Thazhvu - தங்குமிடங்களாம். |