திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2344 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2344மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் – தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் – ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் – இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் – 63
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து.
பதவுரை Show / Hide
தாழ் சடையும், Thazh Sadayum - தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும், Neel Mudiyum - நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும், On Mazhuvum - அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும், Chakkaramum - திருவாழியாழ்வானும்
சூழ் அரவும், Sool Aravum - சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும், Pon Naanum - பொன் னரைநாணுமாய்க்கொண்டு
இரண்டு உருவும், Irandu Uruvum - ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு, Soolum Thirandu Aruvi Paayum Thiru Malai Mel Endhaikku - நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும், Onru Aay Isainthu Thonrum - ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது
ஆல், Aal - ஆச்சரியம்!