திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2345 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2345மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத் கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்- பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார் 64
இசைந்த அரவமும் வெற்பும் கடலும், பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில், கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.
பதவுரை Show / Hide
இசைந்த, Isainthu - கடைகயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும், Aravamum - வாஸுகிநாகமும்
(இசைந்த), Isainthu - மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும், Verpum - மந்தரபர்வதமும்
(இசைந்த), Isainthu - தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும், Kadalum - கடலும் (ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து, Pasainthu - ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு, Angu - அந்தக்கடலிலே
அமுது, Amuthu - அம்ருதமானது
படுப்ப, Paduppa - உண்டாம்படி
அசைந்து, Asainthu - அலைச்சல்பட்டு
கடைந்த வருத்தமோ, Kadaindha Varuththamo - கடைந்த்தனா லுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி, Kacchi - காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில், Veghavil - திருவெஃகாவில்
கிடந்து, Kidandhu - சயனித்துக் கொண்டும்
அங்கு, Angu - அக்காஞ்சீபுரத்தல் (திருப்பாடகத்தில்)
இருந்து, Irundhu - வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)
நின்றதுவும், Nindrathuvum - நின்று கொண்டும் இருப்பது?