| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2346 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் – 65 | அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து, மங்க இரணியன தாகத்தை,- பொங்கி அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே, கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. | அங்கற்கு, Angarku - பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு இடர் இன்றி, Idar Inri - ஒருதுன்பமும் வராதபடி அந்தி பொழுத்தது, Andhi Pozhuththathu - ஸாயங்காலத்தில் இரணியனது, Iraniyanadhu - ஹரண்யனுடைய ஆகத்தை, Aagaththai - மார்வை மங்க, Mang - அழிந்து போம்படியாக அரிஉருவம் ஆய் பொங்கி, Ariuruvam Aayi Pongi - நரஸிம்ஹருபியாய்க்கிளர்ந்து பிறந்த, Pirandha - கிழித்தொழிந்த அம்மான், Ammaan - அவனே காய்ந்து, Kaayndhu - சீறி கரி உருவம், Kari Uruvam - கறுத்தவுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய கொம்பு, Kombu - தந்தத்தை ஒசித்தான், Osiththaan - முறித்துப் போட்டான் |