திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2347 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2347மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ – கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – 66
காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த மதுகை டவரும் வயிறுருகி மாண்டார், அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.
பதவுரை Show / Hide
காய்ந்து, Kaayndhu - சீறி
இருளை மாற்றி, Irulai Maatri - இருளைப் போக்கி
கதிர் இலகு, Kathir Ilaku - ஒளிவிடாநின்றுள்ள
மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த, Eyndha - பொருத்தியிருக்கிற
பணம், Panam - (தன்னுடைய) படங்களினுடைய
கதிர்மேல், Kathirmeel - ஒளிக்குமேலே (திருவனந்தாழ்வான்)
வெவ்வுயிர்ப்ப, Veppuyirppa - பெருமூச்சுவிட,
வாய்ந்த, Vaayndha - கிட்டின
மது கைடபரும், Madhu Kaidaparum - மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார், Vayiru Urugi Maandhaar - குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு, Avarkku - அந்த மதுகைடபர் களைப்போலே பிரதிகூலராய் பருமவர்களுக்கு
ஆங்கு, Aangu - அவ்வண்ணாமாகவே
அது இறுதி கேடு, Adhu Irudhi Kaedu - அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)