| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2348 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய சேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை அழகை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் – அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – 67 | ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், ஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில் பகரு மதியென்றும் பார்த்து. | மால், Maal - ஸர்வேச்வரனுடைய உந்தி வாய், Undhi Vaai - திருநாபியிலே ஓங்கு, Ongu - உயரவளர்ந்த ஒண் கமலத்தின் போது, On Kamalaththin Podhu - அழகிய தாமரைப் பூவானது கை, Kai - அவனுடைய வலத்திருக்கையில் ஆம், Aam - உண்டான திகிரி, Thigiri - திருவாழியை சுடர் என்றும், Sudar Endrum - ஸூர்யனென்றும் (கை ஆம்), Kai Aam - இடத்திருக்கையிலுள்ள வெண் சங்கம், Ven Sangam - வெளுத்த சங்கை வானில் பகரும் மதி என்றும், Vaanil Pakarum Mathi Endrum - ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும் பார்த்து, Paartthu - நினைத்துக்கொண்டு ஆங்கு, Aangu - எக்காலத்திலே மலரும் குவியும், Malarum Kuviyum - மலர்வதும் மூடிக்கொள்வதுமாயிரா நின்றது. |