திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2350 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2350மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு – அதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்- ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் – இப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் – 69
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்.
பதவுரை Show / Hide
வெற்பு என்று, Verppu Endru - ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம், Vengadam - திருமலையைப் பற்றி
பாடும், Paadum - பாடுகின்றான்,
கற்பு என்று, Karppu Endru - குலமரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய், Viyan Thuzhai - விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல், Karuk Kuzhal Mel - (தனது) கரிய கூந்தலில்
சூடும், Soodum - அணிந்து கொள்ளுகிறாள்.
மல், Mal - மல்லர்களை
பொன்ற, Pondra - பொடிபடுத்தின
நீண்ட தோள், Neenda Thol - நீண்ட திருத்தோள்களையுடைய
மால், Maal - ஸர்வேச்வான்
கிடந்த, Kidandha - சயனித்திருக்கப்பெற்ற
நீள் கடல், Neel Kadal - பாந்த திருப்பாற்கடலிலே
நீராடுவான், Neeraaduvaan - தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம், Poonda Naal Ellam - விடிந்த விடிவுகள் தோறும்
புகும், Pugum - புறப்படுகிறான்.