Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2351 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2351மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில் அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் – இனி-ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது – அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது – ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் – 70
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு.
களிறு, Kaliru - (திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி, Pugu Mathathaal Vaai Poosi - மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால், Keel Thaazhnthu Aruvi Ugu Mathathaal - மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி, Kaal Kazhuvi - கால்களை சுத்தி செய்துகொண்டு
கையால், Kaiyaal - துதிக்கையால்
மிகு மதம் தேன், Migu Matham Then - மிகுந்த மதத்தை யுண்டுபண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட, Vindha - மலர்ந்ததுமான
மலர்கொண்டு, Malar Kondo - புஷ்பத்தைக்கொண்டு
விறல் வேங்கடவனையே, Viral Vengadavanaiye - பெருமிடுக்கனான திருமலையப்பனையே
கண்டு வணங்கும், Kandu Vanangum - ஸேவித்து வணங்குகின்றது.