Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2352 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2352மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் – விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் – 71
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.
களிறு, Kaliru - யானையானது
கை எடுத்து ஓடி, Kai Eduthu Odi - தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி
முகில், Mukil - (மதயானை போலெழுந்து) மேகங்களை
குத்த, Kuththa - (எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி, Yaali - (இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு, Oliru Maruppu - (அந்தயானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி, Oosi - முறிக்கிற
கை, Kai - கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று, Piliri Vizha Konru - (அந்தயானை) வாய்விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும், Ninru Adhirum - அங்கேயே நின்றுகொண்டு பெருமுழக்கம் செய்யப்பெற்ற
வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே
மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில்
குழ கன்று கொண்டு, Kuzha Kanru Kondu - இளங்கன்றை (எறிகுணிலாகக்) கொண்டு
எறிந்தான், Erindhaan - (விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று, Kunru - திருமலையாம்.