திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2353 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2353மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – 72
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை, சென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை இளங்குமரர் கோமான் இடம்.
பதவுரை Show / Hide
குன்று ஒன்றினான, Kunru Onrinaan - அத்திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர், Kura Magalir - குறத்திகள்
கோல் வளை கை, Kol Vazhakai - அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று, Sendru - மேலேறி
விளையாடும், Vilaiyaadum - விளையாடா நிற்கப் பெற
தீம் கழை, Theem Kazhai - அழகிய மூங்கில்கள்
போய், Poi - சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று, Vendru - ராஹுவைத்தகர்த்து,
விளங்கு மதிகோள் விடுக்கும், Vilangu Mathikoal Vidukkum - விளங்காநின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப்பெற்ற
வேங்கடமே, Venkatame - திருமலையே
மேலே, Mele - மேலுலகத்திலுள்ள
இன குமரர் கோமான், Ina Kumarar Koomaan - நித்யயுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.