| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2354 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் – ஸ்ரீ திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் – 73 | இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி, வடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே, நாத்தன்னா லுள்ள நலம். | ஏழ் பூண்ட, Ezhu Poond - ஏழு குதிரைகளைப் பூண்ட இரவி தேர், Iravi Ther - ஸூர்யனுடைய தேரை இடம் வலம், Idam Valam - (மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் ஒட்டி, Otti - (அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும் வட முகம் வேங்கடத்து மன்னும், Vada Mugam Vengadathu Mannum - வடதிசையின் கணுள்ள திருவேங்கடத்தில் நித்யவாஸம் பண்ணுமவனும் குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான், Kudam Nayandha Koothan Aayi Nindraan - ஆசையோடு குடக்கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய குரை கழல் கூறுவதே, Kurai Kazhal Koovuvadhe - ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே நா தன்னால் உள்ள நலம், Naa Thannal Ulla Nalam - நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம். |