Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2355 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2355மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – நமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் – இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் – அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – 74
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டு போய் வீழ , – சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
சலமே, Salame - கபடமாகவே
நஞ்சு, Nanju - விஷத்தை
ஊட்டு, Oottu - உண்பிக்க வந்த
வன் பேய், Van Pei - கொடிய பூதனையானவன்
நிலமே, Nilame - பூமியிலே
புரண்டு போய் வீழ, Purandu Poi Veezh - (பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக்
தான் சலமே, Thaan Salame - தானும் கபடமாகவே
வெம் கொங்கை, Vem Kongai - (அவளது) வெவ்விய முலையை
உண்டானை, Undaanai - அமுது செய்த கண்ணபிரானை
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
மீட்டு, Meetu - (அப்பூதனைபக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன், Oottuvan - (தனது முலைப்பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து, Saarndhu - அணுகிச் சென்று
தன் கொங்கை, Than Kongai - தனது முலையை
வாய் வைத்தான், Vaai Vaiththaan - அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல், Nalame Valithukol - இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!