Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2357 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2357மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் – புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான் நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் – உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா – ஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் – 76
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
நீர், Neer - நீங்கள்
பொருப்பு இடையே, Poruppu Idaiye - மலைகளின் நடுவே
நின்றும், Nindrum - நின்று கொண்டும்
புனல், Punal - நீர்நிலைகளிலே
குளித்தும், Kuliththum - முழுகிக்கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே, Ainthu Neruppu Idaiye - பசுசாக்கி மத்யத்திலே
நிற்கவும், Nirkavum - நின்றுகொண்டும் தவஞ்செய்ய
வேண்டா, Venda - வேண்டியதில்லை,
விருப்பு உடைய, Viruppu Udaya - (எல்லாராலும்) விரும்பத்தக்கதாயிருக்கின்ற
வெஃகா, Vegha - திருவெஃகாவில்
சேர்ந்தானை, Serndhaanai - வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய், Mei - மெய்யாக (அந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய்கை தொழுதால், Malar Thuykai Thozhudhal - புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள், Thee Vinaigal - துஷ்கருமங்களெல்லாம்
ஆய்ந்து, Aayndhu - (நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே, Aghakaave - சுருங்கிப்போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)