Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2359 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2359மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் – அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன வேண்டா -என்கிறார் – அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது – அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார் 78
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், – சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
ஆழி, Aazhi - திருவாழியாழ்வானை
வலவன், Valavan - வலத்திருக்கையிலுடையவனும்
முரன், Muran - முராஸுரனுடைய
நாள், Naal - ஆயுளையும்
வலம், Valam - வலிமையையும்
சுழித்த, Suzhiththa - போக்கின
மொய்ம்பன், Moympan - மிடுக்கையுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல், Saran Aam Ael - ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே, Kathi Aethu Nilai Ethu Pirappu Ethu Ennaadhe - (நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று (இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம், Namakku Endrum Aran Aam - நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே)
ஓர்த்து, Oorththu - இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே, Maayanaiye - ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி, Kathi - உபாயமாக
ஓது, Othu - அநுஸந்தித்துக் கொண்டிரு.