திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 236 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
236பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 3
நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின் பின் என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-3
பதவுரை Show / Hide
என்,En - என் மகனான
மணி வண்ணனை,Mani Vannanai - நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்,Nal - லோகோத்தரமான
மணி,Mani - நவ மணிகள் பதித்த
மேகலை,Megalai - மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு,Nangaimaarodhu - யுவதிகளோடு கூட
நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும்
பொன் மணி மேனி,Pon Mani Meni - அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி,Puzhuthi Aadi - புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே,Thiriyame - திரிய வொண்ணாதபடி
கான்,Kaan - காட்டிலே
கல்,Kal - (இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்) மலையிலே
மணி நின்று அதிர்,Mani Nindru Athir - மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை,Athar Idai - வழியிலே
கன்றின் பின்,Kanrin Pin - (வருந்தும்படியாக) கன்றுகளின் பின்னே
போக்கினேன்,Pokkinean - போகவிட்டேனே!
எல்லே பாவமே,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.