| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2360 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் – அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் – நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் – 79 | ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து, பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி, நிரையார மார்வனையே நின்று. | கார்த்த, Kaartha - பசுமையான நிறமுள்ளதாய் விரை ஆர், Virai Ar - பரிமளம் நிரம்பியதான நறு துழாய், Naru Thuzhai - செவ்வித்திருத்துழாய் மாலையையுடையவனும் வீங்கு ஓதம் மேனி, Veengu Otham Meeni - பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும் நிரை ஆரம் மார்வனையே, Nirai Aaram Maarvanaiye - ஒழுங்கான ஹாரங்களணிந்த திருமார்பை யுடையவனுமான பெருமானையே நின்று, Ninru - நெஞ்சு நிலைத்து நின்று ஓர்த்த மனத்தர் ஆய், Oorththa Manaththar Aay - அநுஸந்திக்கின்ற மனமுடையாய் ஐந்து அடக்கி, Aindhu Adakki - பஞ்சேந்திரியங்களையும் வென்று ஆராய்ந்து, Aaraindhu - ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து பேர்த்தால், Paerththal - ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக்கொண்டால் பிறப்பு ஏழும், Pirappu Ezhum - ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை போக்கலாம், Pokkalam - தொலைத்துவிடலாம். |