| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2362 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் – விஷயத்தைப் பார்த்தவாறே-முதலடி இட்டிலராய் இருந்தார் – அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து இவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார் இத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் – அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும் புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் – கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது – 81 | நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன் நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்ப துணர்வு. | என் நெஞ்சமே, En Nenjhame - எனது மனமே!, நெஞ்சால் நினைப்பு அரியன் எலும், Nenjhal Ninaippu Ariyan Elum - (எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து) நிலைப்பெற்று, Nilaiyeptru - காலூன்றி நின்று பேசாய், Pesai - அவனைப் பேசப்பார் நினைக்குங் கால், Ninaikkung Kaal - நாம் ஒருகால் நினைத்தாலும் நெஞ்சத்து, Nenchatthu - நெஞ்சுதன்னிலே பேராது நிற்கும், Peraadhu Nirkum - விட்டுநீங்காமல் நிலைத்து நிற்கின்ற பெருமானை, Perumaanai - எம்பெருமானை உணர்வு, Unarvu - நமது நெஞ்சானது ஓராது நிற்பது என்கொலோ, Oraadhu Nirpadhu Enkolo - அநுஸந்தியாமல் வானாவிருப்பது ஏனோ? |