Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2363 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2363மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் – இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் – 82
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, – இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி.
உணரில், Unaril - (அப்பெருமானை நாமாக) அறியப்பார்த்தாலும்
உணர்வு அரியன், Unarvu Ariyan - (அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும், Ullam Pugundhu Punarilum - நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன், Unmai Kaanbu Ariyan - உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி, Ini - இப்படியான பின்பு
இணர் அணைய, Inar Anaiya - பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு, Kongu - தேனிலே
வண்டு, Vandu - வண்டுகள்
அணைந்து, Anaindhu - வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற
தன், Than - குளிர்ந்த
துழாய், Thuzhaai - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை, Komanai - அப்பெருமானை
எங்கு, Engu - எவ்விடத்தில்
அணைந்து, Anaindhu - கிட்டி
காண்டும், Kaandum - காணக்கடவோம்.