| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2364 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – 83 | இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், இனியவன் காண்பரிய னேலும், – இனியவன் கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தி னுள்ளே யுளன். | இனி, Ini - இப்போது அவன், Avan - ‘அந்தஸர்வேச்வரன் மாயன், Maayan - மாயைக்காரன்‘ என, En - என்று உரைப்பர் எனும், Uraippar Enum - சொல்லுவார்களே யாகிலும், இனி, Ini - இப்போது அவன், Avan - அப்பெருமான் காண்பு அரியன் எலும், Kaanbu Ariyan Elum - கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும் கன்னத்தாள், Kannaththaal - க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று) மண் கொண்டு, Man Konda - பூமிதானம் வாங்கி விண் கடந்த பை கழலான் அவன், Vin Kadandha Pai Kazhalan Avan - ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான் இனி, Ini - இப்போது உள்ளத்தன் உள்ளே உள்ள, Ullaththan Ullae Ulla - எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான் (இந்த பரமலாபமே போது மென்கை) |