Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2365 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2365மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது – கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் – வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும் கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் – 84
உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், – உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி.
நால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களினுடைய
உள் பொருள், Ul Porul - உள்ளுறை பொருளாக
உளனாயவனை, Ulanayavanai - இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து, Therndhu - (ஜ்ஞாநயோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக, Ullathu Ulan Aaga - நெஞ்சிலே பொருந்தியிருப்பவனாக
உணர்வர் ஏலும், Unarvar Aelum - (சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண், Nedu Kan - நீண்ட தீருக்கண் களையுடைய
மாயவன், Maayavan - ஆச்சர்யபூதனாக
உளனாபவனை, Ulanapavanai - இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே, Kandaar Yaavare - கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர், Kavi Ugappar - தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக்கொண்டு போது போக்குவர்களத்தனை.