| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2366 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில் எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் – நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித் தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – 85 | கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய், செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், – புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே, – பின்னைக்காய் ஏற்றுயிரை அட்டான் எழில். | கவியினார், Kaviyinaar - தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க்கொண்டு கை புனைந்து, Kai Punaindhu - அஜ்ஞலிபண்ணி கண், Kan - தமது கண்கள் ஆர் கழல் போய், Aar Kazhal Poi - (அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று செவியின் ஆர் கேள்வியர் ஆய், Seviyin Aar Kelviyir Aay - காது நிறைந்த கேள்விகளையுடையராய்க் கொண்டு சேர்ந்தார், Serndhaar - வந்து பணிந்தவர்களான புவியினார், Puviyinaar - பூமியிலுள்ளா ரெல்லாரும் போற்றி உரைக்க, Pothri Uraikka - (ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும், பின்னைக்காய் எது உயிரை அட்டான் எழில் பொலியுமே, Pinnaikkai Edhu Uyirai Attaan Ezhil Poliyume - நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ? |