Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2367 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2367மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும் அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் – சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் – ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார் 86
எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், – எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து.
எழில் கொண்ட, Ezil Konda - அழகையுடைத்தாய்
நீர், Neer - நீர்நறைந்ததான
மேகம் தான், Megam Thaan - மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து, Ezil Konda Min Kodi Eduthu - அழகிய மின்னற்கொடி படாப்பெற்று
வேகம் தொழில் கொண்டு, Vegam Thozhil Kondu - வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற
முழங்கி தோன்றும், Muzhangi Thondrum - கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம், Kaar Vaanam - கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும், Anna Nedumaal Nirampola Kalandhu Kaattum - அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது.