Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2368 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2368மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் – ஸ்ரீ எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் – ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் – பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார் அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார் 87
கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும், – நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.
மணி கலந்து, Mani Kalandhu - ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி
இமைக்கும், Imaykkum - விளங்காநின்ற
கண்ணா, Kannaa - கண்ணபிரானே!
மாதகம், Maadhagam - மரதகரத்னமானது
மலர்ந்து, Malarndhu - ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும், Nin Meeni Kaattum - உனது திருமேனியை ஒத்திராநின்றது,
நலம் திகழும், Nalam Thigazhum - அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய், Kondhin Vaai - கொத்துகளிலே
வண்டு அறையும், Vandu Araiym - வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற
தண் துழாய், Than Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த
கோமானை, Komanai - ஸர்வேச்வரனாகிய உன்னை
அந்தி வரன் அது காட்டும், Andhi Varan Adhu Kaattum - ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.