திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2369 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2369மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் – உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் – இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – 88
அதுநன் றிதுதீதென் றையப் படாதே, மதுநின்ற தண்டுழாய் மார்வன், – பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள் முன்னங் கழலும் முடிந்து.
பதவுரை Show / Hide
அது நன்று இது தீது என்று ஐயம் படாதே, Adhu Nandru Ithu Theethu Endru Aiyam Padaadhe - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன், Madhu Nindra Than Thuzhai Maarvan - தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற, Podhu Nindra - ஸர்வஜந ஸாதாரணமான
பொன் அம்கழலே, Pon Amkalale - விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின், Thozhumin - தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம், Munnam - முந்துறவே
முழு வினைகள், Muzhu Vinaigal - ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து, Mudinthu - உருமாய்ந்து
கழலும், Kazhalum - விட்டு நீங்கும்.