திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 237 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
237பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 4
வண்ணக் கருங் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின் பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-4
பதவுரை Show / Hide
கண்ணுக்கு இனியானை,Kannukku Iniyanai - கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை,Ennarkku Ariyanai - (இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்,Ep Paadi Engum - இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து,Pala Seidhu - பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்,Vannam Karu Kuzhal - அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்,Maadhar - பெண் பிள்ளைகள்
வந்து,Vandhu - (தாயாகிய என்னிடம் ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி,Alar Thoottidap Panni - பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்,Pokkinean - அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.