| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2370 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – ஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி – ஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி – இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் – 89 | முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, – தடிந்தெழுந்த வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே,மேலொருநாள் தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. | முடிந்த பொழுதில் சூற வாணர், Mudintha Pozhudhil Soora Vaanar - மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள் எனம் படிந்து உழு சால், Enam Padinthu Uzhu Saal - காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே பை தினைகள் வித்த, Pai Thinaihal Vitha - புதிய தினைவிதைகளை விதைக்க தடிந்து, Thadinthu - அறுத்துப்போட்ட பின்பும் எழுந்த, Ezhunth - (நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த வேய்ங்கழை, Veyngazhai - மூங்கில் தடிகளானவை போய், Poi - மேலேசென்று விண் திறக்கும், Vin Thirakkum - ஆகாசத்தை யளாவப்பெற்ற வேங்கடம், Vengadam - திருவேங்கடம் மேல் ஒருநாள், Mel Orunaal - முன்பொருநாள் தீம் குழல், Theem Kuzhal - மதுரமான புல்லாங்கிழலை வாய் வைத்தான், Vaai Vaiththaan - தருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய சிலம்பு, Silambu - திருமலையாம். |