திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2371 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2371மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே – ஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் – இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார் 90
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா றலம்பிய சேவடிபோய், அண்டம் – புலம்பியதோள் எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ, வண்டுழாய் மாலளந்த மண்.
பதவுரை Show / Hide
சிலம்பும், Silambum - (திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும், Seri Kazhalum - செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்
சென்று இசைப்ப, Sendru Isaippa - எங்கும் ஒலிக்க
விண் ஆறு, Vin Aaru - ஆகாசகங்கையிலே
அலம்பிய, Alambiya - விளக்கப்பட்ட
கே அடி, Ke Adi - திருவடிகளானவை
அண்டம் போய், Andam Poi - அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய, Pulampiya - (அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள், Thol - திருத்தோள்கள்
எண் திசையும் சூழ, En Thichaiyum Soozha - எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது, Idam Podhathu - இடம் போராவில்லை,
கண் துழாய் மால், Kan Thuzhai Maal - அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்
அளந்த, Alandha - அளந்துகொண்ட
மண், Man - பூமியானது
என் கொல், En Kol - (சிறியதே போலும்)