திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2372 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2372மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார் அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர் அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் – சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் – அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் – 91
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன்.
பதவுரை Show / Hide
வயிற்றினோடு ஆற்ற மகன், Vayittrinodu Aatra Magan - வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும், Man Undum - (பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி, Peychchi - பூதனையினது
முலை, Mulai - (நஞ்சு தீற்றின) முலையை
உண்டும், Undum - அமுது செய்தும்
ஆற்றதாய், Aatrathai - த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
விழுங்க, Vizhunga - (களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டி
வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால், Kannni Kayittrinai - பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட, Katta - உரைக்கக்கட்டிப் போட,
தான், Thaan - ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான், Kattundu Irundhaan - (அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான்