திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2373 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2373மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் – அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று புத்தி பண்ணு -என்கிறார் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் — 92
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், மகனா மவன்மகன்றன் காதல் – மகனை சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே நிறைசெய்தென் நெஞ்சே. நினை.
பதவுரை Show / Hide
என் நெஞ்சே, En Nenchae - எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத, Oruvarukku Magan Alladha - (கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப்பிறந்தத் தகாத (ஸர்வலோக பிதாவான)
மா மேனி, Maa Meeni - சிறந்த திருமேனியையுடைய
மாயன், Maayan - ஆச்சர்யபூதனாய்
மகன் ஆமவன், Magan Aamavan - (வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன், Mahan Than - தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை, Kaadhal Mahanai - இஷ்ட குமாரனான ஆநிருத்தாழ்வானை
சிறை செய்த, Sirai Seidha - சிறையிலேவைத்த
வாணன், Vaanan - பாணாஸுரனுடைய
தோள், Thol - தோள்களாயிரத்தையும
செற்றான், Setraan - அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே, Kazhale - திருவடிகளையே
நிறை செய்து, Nirai Seidhu - பூர்த்தியாக
நினை, Ninai - சிந்தை செய்வாயாக