திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2374 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2374மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும் நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – 93
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை, உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenchae - ஓமனமே!
நீண்ட, Neenda - (முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால், Thirumaal - ச்ரிய பதியானவனும்
கனைத்து உலவு வௌளத்து, Kanaiththu Ulavu Voulathu - கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி, Orpillai Aayi Anaiththu Ulagum Ulodukki - ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும, Anaiththu Ulagum - உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி, Ul Odduki - திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல், Aal Mael - ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை, Mella Thuyinraanaai - மெள்ள சயனித்துக்கொண்டவனுமான பெருமானை
உய்த்து, Uyuthu - சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,, Ullaththae Vai - தியானிக்கக் கடவாய்
உலகில், Ulagil - இவ்வுலகில்
நினைத்து, Ninaiththu - (அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார், Aar Thelivaar - தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)